திருக்கல்யாணம்
புதுச்சத்திரம் : ரெட்டியார்பேட்டை கேசவ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.ரெட்டியார்பேட்டை கேசவ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜை, வீதியுலா நடந்தது. கடந்த 11ம் தேதி மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத கேசவ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.