நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு வரவேற்பு
சிதம்பரம்: பயிற்சி முடிந்து திரும்பிய நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த, 12 நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் (உளவியல் துறை) அலுவலர் நீலகண்டன் தலைமையில், தமிழக அரசு சார்பில் கோயம்புத்துார் பாரதியார் பல்கலையில் “சமூக நீதிக்கான இளைஞர்கள்” என்ற தலைப்பில் நடந்த, 3 நாள் மாநில அளவிலான பயிலரங்கில் பங்கேற்றனர்.இப்பயிற்சி பட்டறையில், சமூக நீதி, இடஒதுக்கீடு, இணையப் பாதுகாப்பு குறித்த பல்வேறு தலைப்புகளில், மாணவர்கள் சமூக மாற்றத்தின் முகவர்களாக மாறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பங்கேற்று பல்கலைகழகம் திரும்பிய மாணவ, மாணவிகளை பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அருட்செல்வி, பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ் வரவேற்றார். கல்வியியல் புல முதல்வர் குலசேகர பெருமாள், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், கடல் அறிவியல் புல முதல்வர் சவுந்திரபாண்டியன் உளவியல் துறை தலைவர் கோவிந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.