உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒன்றிய அலுவலகம் வந்த அமைச்சருக்கு வரவேற்பு

ஒன்றிய அலுவலகம் வந்த அமைச்சருக்கு வரவேற்பு

சிறுபாக்கம் : மங்களூரில் புதிய ஒன்றிய அலுவலகத்தை பார்வையிட வந்த அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.மங்களூரில் புதிய ஒன்றிய அலுவலகம் ரூ.4 கோடியில் கட்டப்பட்டது. அதனை, முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் சில நாட்களுக்கு முன் திறந்து வைத்தார். திட்டக்குடி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார். இந்நிலையில், மங்களூரில் புதிய ஒன்றிய அலுவலகத்தை அமைச்சர் கணேசன் பார்வையிட்டார். அவருக்கு, மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் தலைமையில், மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.பின், கட்டுமானப் பணிகளின் விபரம், தரம், அலுவலர்கள் அறை, அடிப்படை வசதிகளை விசாரித்தார்.அப்போது, மங்களூர் பி.டி.ஓ.,க்கள் வீராங்கன், தண்டபாணி, மேலாளர்கள் பாலக்கிருஷ்ணன், சக்திவேல், பொறியாளர்கள் மணிவேல், செந்தில்வடிவு, தி.மு.க., ஒன்றிய செயலர்கள் செங்குட்டுவன், சின்னசாமி, அமிர்தலிங்கம், பாவாடை கோவிந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை