மாற்றுத்திறனாளிளுக்கு நலத்திட்ட உதவிகள்
பண்ருட்டி; பண்ருட்டியில் மாற்றுத்திறனாளிகள், 286 நபர்களுக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.பண்ருட்டி டேனிஷ்மெஷின் பள்ளியில், என்.எல்.சி., நிர்வாகத்தின் சி.எஸ்.ஆர்., நிதி மூலம் ரூ.70 லட்சம் மதிப்பில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு என்.எல்.சி., மேலாளர் குப்தா வரவேற்றார். என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார்மோட்டுப்பள்ளி தலைமை தாங்கினார்.விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் -87. முன்று சக்கர சைக்கிள்கள்- 17, வீல் சேர்- 28, சிபிவீல் சேர்- 5, காதுகேட்கும் கருவி- 86 உள்ளிட்ட 286 பயனாளிகளுக்கு உதவிகளை, கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி ஆகியோர் வழங்கினர்.