மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம்
05-Sep-2025
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில் அமைச்சர் கணேசன் பங்கேற்றார். சிறுபாக்கம் அடுத்த அடரி ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. கூடுதல் கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியா, கூட்டுறவு துணை பதிவாளர் சபிதா முன்னிலை வகித்தனர். அமைச்சர் கணேசன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன், தாசில்தார் செந்தில்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முக சிகாமணி, முருகன், ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் சின்னசாமி அமிர்தலிங்கம், செங்குட்டுவன், நகர செயலாளர் பரமகுரு, நிர்வாகிகள் சேதுராமன், நிர்மல், ராமதாஸ், சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
05-Sep-2025