உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலத்திட்ட உதவி எம்.எல்.ஏ., வழங்கல்

நலத்திட்ட உதவி எம்.எல்.ஏ., வழங்கல்

கடலுார்: கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை சிறப்பு அபிஷேகம், மாலை சுவாமி உள்புறப்பாடு நடந்தது. ஆறாம் நாள் உற்சவமாக நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் டாக்டர் பிரவீன் அய்யப்பன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி