உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கடலுார்: நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுார் தொழிலாளர் துறை உதவி ஆணையர் குமார் (அமலாக்கம்) விடுத்துள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் தொழிலாளியின் பங்காக 20 ரூபாய் மற்றும் நிறுவனத்தின் பங்காக 40 ரூபாய் என, மொத்தம் 60 ரூபாய் கணக்கிட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி, நடப்பு 2026ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை வரும் 2027ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் நிறுவனங்கள் செலுத்த வேண்டும். தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு வாரியம் மூலம் மழலையர் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை கல்வி உதவித் தொகை, கல்வி ஊக்கத் தொகை, பாடநுால் உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரணம், விபத்து மரணம், மூக்கு கண்ணாடி, தையல் இயந்திரம், அடிப்படை கணினி பயிற்சி ஆகியவற்றிற்கான உதவித் தொகை, உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு உதவித் தொகை, மாவட்ட அளவிலான விளையாட்டு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித் தொகை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ. 35 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். 2026–27ம் ஆண்டிற்கு கல்வி உதவி, கல்வி ஊக்கம் மற்றும் பாடநூல் ஆகியவற்றிற்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.iwb.in.gov.inஎன்ற தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை–6 என்ற முகவரிக்கு வரும் டிச., 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை