உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.ஏ.ஓ., அலுவலகங்கள் திறப்பு எப்போது

வி.ஏ.ஓ., அலுவலகங்கள் திறப்பு எப்போது

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வந்த வைடிபாக்கம், சோழவல்லி உள்ளிட்ட பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்களின் கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து அந்தந்த அலுவலகத்தை காலி செய்து வி.ஏ.ஓ.,க்கள் தங்களது வாடகை கட்டடத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.வைடிபாக்கம், சோழவல்லி உள்ளிட்ட பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்கள் வேல்முருகன் தொகுதி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 10 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடந்தது. கட்டுமான பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளன. இதனால், இப்பகுதி மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற சான்றிதழ் கேட்டு வி.ஏ.ஓ., அலுவலகங்களை தேடி கண்டுபிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேரம் விரயமாவதால் தினசரி பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய வி.ஏ.ஓ., அலுவலகங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி