மேலும் செய்திகள்
டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவர் கைது
05-Jan-2025
விருத்தாசலம், : கணவர் புகாரின் பேரில், மாயமான மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.வேப்பூர் அடுத்த ஒரங்கூரை சேர்ந்தவர் துரைசாமி மகன் காளிமுத்து, 31. இவருக்கும் கார்மாங்குடி அனுசுயாதேவி, 24, என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, குழந்தை இல்லை. கடந்தாண்டு நவம்பர் 29ம் தேதி தாய் வீட்டிற்கு சென்ற அனுசுயாதேவியை காளிமுத்து அழைக்கச் சென்றபோது, உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு வருவதாக கூறியுள்ளார்.இந்நிலையில், கடந்த 26ம் தேதி தாய் வீட்டிலிருந்த அனுசுயாதேவி மாயமானார். இது குறித்து காளிமுத்து புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
05-Jan-2025