உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்டுபன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

காட்டுபன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பகுதிகளில் காட்டுப்பன்றிகள், விவசாய பயிர்களை சேதம் செய்து வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், வாழை, கரும்பு போன்ற பல பயிர்களை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதமாக்கி வருகிறது. காட்டுபன்றி தொல்லை அதிகம் இருப்பதால் வனத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் அதை அழிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், மாவட்டம் முழுவதும் பன்றி தொல்லை அதிகத்துள்ளதால் வனத்துறையினரால் கட்டுபடுத்த முடியவில்லை.நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டையை சேர்ந்த அப்துல்அமீது மேல்பாதியில் 3 ஏக்கரில் வாழை பயிர் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக 100 க்கும் மேற்பட்ட வாழை கன்றுகளை காட்டுபன்றிகள் சேதபடுத்தியுள்ளன. இதே போன்று பல விவசாயிகள் காட்டுப்பன்றிகளால் பாதிப்படைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ