புதிய ரேஷன் கடை அமைக்கப்படுமா?
சேத்தியாத்தோப்பு: பழுதடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட கோரிக்கை எழுந்துள்ளது. வடப்பாக்கம் கிராமத்தில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் பழுதடைந்த நிலையில், தற்போது தனியார் இடத்தில் இயங்கி வருகிறது. பழைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதை இடித்து அகற்ற விட்டு, புதிய ரேஷன் கடை கட்ட, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.