மேலும் செய்திகள்
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுவது எப்போது?
25-Jan-2026
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லை பஸ் நிறுத்தத்தில் அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி தொழி லாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிதம்பரம், கடலுார் பகுதிகளுக்கு செல்ல, தினமும் பஸ் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் இப்பகுதி யில் இரண்டு பஸ் நிறுத் தங்கள் உள்ளன. ஆனால் அந்த பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில், பஸ் ஏறவரும் பயணிகள் நின்று செல்ல பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு, மணிக் கொல்லை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25-Jan-2026