நிழற்குடை அமைக்கப்படுமா?
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் வில்லியநல்லுார், பால்வாத்துண்ணான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சிதம்பரம் மற்றும் கடலுார் பகுதிகளுக்கு தினமும் பஸ்சில் பயணம் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, விழுப்புரம்-நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தின் போது, அங்கு இருந்த பயணிகள் நிழற்குடை, இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை புதிய நிழற்குடை கட்டவில்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.