பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பஸ் இயக்கப்படுமா
பெண்ணாடம், : பள்ளி நேரங்களில் விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இறையூர், ஆவினங்குடி, கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவில் உள்ளன.இப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பெரும்பாலான மாணவ, மாணவிகள் டவுன் பஸ்களில் வருகின்றனர். பள்ளி துவங்கும் போது காலை வேளையிலும், பள்ளி முடியும் போது மாலை வேளையிலும் மாணவர்கள் காத்திருக்கும் பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காமல் செல்கின்றன.அதில் ஓரிரு பஸ்கள் மட்டுமே நிற்பதால் அனைத்து மாணவர்களும் அதில் முண்டியடித்து ஏறிச் செல்கின்றனர். பஸ்சில் இடம் பற்றாக்குறையால், மாணவர்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.எனவே, பள்ளி நேரங்களில் விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.