உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  எம்.ஜி.ஆர்., காலத்திற்கு பின் தொகுதியை மீட்ட அ.தி.மு.க., வரும் தேர்தலில் கடலுாரில் கரையேறுமா?

 எம்.ஜி.ஆர்., காலத்திற்கு பின் தொகுதியை மீட்ட அ.தி.மு.க., வரும் தேர்தலில் கடலுாரில் கரையேறுமா?

க டலுார் மாவட்டத்தில் இதுவரை நடந்த பொதுத்தேர்தலில் எம்.ஜி.ஆர்., காலத்திற்கு பின் கடலுார் தொகுதியை கடந்த, 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க., கைப்பற்றியது. நம் நாட்டிற்கு கடந்த, 1947 ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. அதன் பின்னர் கடந்த, 1952ம் ஆண்டு முதல் சட்டசபை பொதுத் தேர்தல் நடந்தது. உழவர் உழைப்பாளர் கட்சியில் இருந்து, ராமசாமி படையாச்சியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த, 1957 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து சீனிவாச படையாச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த வந்த, 1962ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த, 1967 ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசும், தி.மு.க., வும் மோதிக்கொண்டன. இதில் தி.மு.க.,வை சேர்ந்த இளம்வழுதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வெங்கிடேசனை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். 1971ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்., கட்சி சார்பில் போட்டியிட்ட சீனிவாச படையாச்சியை, எதிர்த்து தி.மு.க., வேட்பாளர் கோவிந்தராஜன் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர்., ஆட்சி தொடர்ந்து கடந்த, 1977 ம் ஆண்டு எம்.ஜி,.ஆர்., தலைமையிலான அ,தி.மு.க., உருவானது. தி.மு.க., வேட்பாளர் கோவிந்தராஜனை தோற்கடித்து அப்துல்லத்தீப் வெற்றி பெற்றார். மீண்டும் 1980 ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க., தொகுதி அமைப்பாளர் ரகுபதியிடம் போட்டியிட்டு மீண்டும் கோவிந்தராஜன் வெற்றி பெற்றார். 1984 ம் ஆண்டு தி.மு.க,வை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை, தோற்கடித்து காங்., கட்சியை சேர்ந்த செல்லப்பா வெற்றி பெற்றார். 1989 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்., வேட்பாளர் ராதாகிருஷ்ணனை, தி.மு.க., வை சேர்ந்த புகழேந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா ஆட்சி கடந்த, 1991ல் காங்., கட்சி, அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க., சார்பில் போட்டியிட்ட புகழேந்தியை தோற்கடித்தது. 1996 ம் ஆண்டு காங்., வேட்பாளர் ராஜேந்திரனை தோற்கடித்து மீண்டும் புகழேந்தி வெற்றி பெற்றார். அதேபோல 2001, ல், காங்., வேட்பாளர் வெங்கடேசனை, தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி தோற்கடித்தார். கடந்த, 2006ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் குமாரை தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அய்யப்பன் வெற்றி பெற்றார். அதன் பின்னர் சம்பத் களமிறக்கப்பட்டார். கடந்த, 2011ம் ஆண்டு தி.மு.க., வேட்பாளர் புகழேந்தியோடு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2016 ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது, மீண்டும் புகழேந்தியை தோற்கடித்து வெற்றி பெற்றார். இவ்விரண்டு தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று, சம்பத் அமைச்சர் பதவி வகித்தார். 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் அய்யப்பனிடம் 5151 ஓட்டுகள் வித்தியாசத்தில் சம்பத் தோல்வி அடைந்தார். கடலுார் தொகுதியில் எம்.ஜி.ஆர்., காலத்திற்கு பின், அ.தி.மு.க., இரு முறை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில், தொகுதியை கைப்பற்றுமா என, அ.தி.மு.க.,வினர் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக்கிடக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை