உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உடைந்த தடுப்பணை கட்டைகள் சீர் செய்யப்படுமா?

உடைந்த தடுப்பணை கட்டைகள் சீர் செய்யப்படுமா?

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த நெல்லித்தோப்பு வாய்க்காலில் உடைந்த தடுப்பணைகளை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு-சி.என்.பாளையம் செல்லும் சாலையில் உள்ள நெல்லித்தோப்பில் வாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்காலில் கீழ்மாம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். இந்த வாய்க்காலில் கடந்த ஆண்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.இந்த வாய்க்காலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பல இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டது.இந்த தடுப்பணைகளில் மழைகாலத்தில் மழைநீர் தேங்கி வந்தது. தற்போது இந்த தடுப்பணையின் கட்டைகள் உடைந்துள்ளதால்,மழைநீர் வீணாக கெடிலம் ஆற்றில் கலந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, பண்ருட்டி ஒன்றிய அதிகாரிகள் இந்த தடுப்பணையின் கட்டைகளை விரைந்து சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை