மேலும் செய்திகள்
மோசமான நிலையில் சுகாதார வளாகம்
07-Jan-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் மேட்டுக்காலனியில் வீணாகிவரும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் நகரில், சேலம் புறவழிச்சாலையொட்டிய மேட்டுக்காலனியில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள் புறவழிச்சாலையின் இருபுறமும் இயற்கை உபாதைக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் ஆலிச்சிகுடி பிரிவு சாலையில் இருந்து, ரயில்வே மேம்பாலம் வரை துர்நாற்றம் வீசுகிறது.இதை தவிர்க்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் ஒரு சில மாதங்களில் பயன்பாடின்றி பாழானது. இதனால் அவ்வழியே செல்லும் பயணிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.எனவே, சுகாதார வளாகத்தை சீரமைத்து தண்ணீர், மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
07-Jan-2025