மேலும் செய்திகள்
மருமகள் மாயம்: மாமனார் புகார்
15-Mar-2025
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
22-Mar-2025
விருத்தாசலம்; கணவருடன் ஏற்பட்ட தகராறில் பூச்சிமருந்து குடித்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.விருத்தாசலம் அடுத்த எ.வடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமூர்த்தி. இவரது மனைவி கவுசல்யா,32; இருவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அடகு வைத்த நகைகளை மீட்டு தருமாறு கேட்டதால், தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த கவுசல்யா பூச்சிமருந்து குடித்துவிட்டு வழக்கம்போல துாங்கச் சென்றார். அதிகாலை ராஜமூர்த்தி எழுந்து பார்த்த போது, கவுசல்யா இறந்து கிடந்தார். இது குறித்து கவுசல்யா தாய் அன்னபாக்கியம், அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
15-Mar-2025
22-Mar-2025