மின்னல் தாக்கி பெண் காயம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே மின்னல் தாக்கி பெண் காயமடைந்தார். சேத்தியாத்தோப்பு அடுத்த பொன்னங்கோவில் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி மனைவி சந்தியா,33; நேற்று மதியம் 3:00 மணிக்கு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மழை பெய்து, வீட்டின் கூரையை மின்னல் தாக்கியதில், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதமானது. சந்தியா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துமனையில் சேர்த்தனர். ஒரத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தினர்.