மேலும் செய்திகள்
வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்கு
01-Aug-2025
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே உள்ள குளம் ரூ.45 லட்சம் மதிப்பில் துார்வாரும் பணி துவங்கியது. குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் குளம் உள்ளது. குளத்தில் உள்ள தண்ணீர் மூலமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில், குளம் துார்வாரப்படாமல் இருந்தது. குளத்தை துார்வார வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று குளத்தை துார்வார எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு சிறப்பு நிதியில் 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குளத்தை ஜே.சி.பி., இயந்திரம் மூலமாக துார்வாரும் பணி துவங்கியது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
01-Aug-2025