மாணவிக்கு தொந்தரவு: தொழிலாளி கைது
புவனகிரி: பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். புவனகிரி அடுத்த முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி,25; தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற 16 வயது மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செல்வமணியை கைது செய்தனர்.