மேலும் செய்திகள்
மகள் மாயம்: தாய் புகார்
01-Nov-2025
வடலுார்: பணம் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அடுத்த குருவிநத்தம், பெருமாள் நகரை சேர்ந்தவர் பழனி, 60; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் வடலுார் சபை வளாகத்தில் தங்கி காலையில் அங்குள்ள கழிப்பறையில் குளிக்க சென்றார். அப்போது அவர் பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை, பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த அருள் செல்வன், 25; என்ற வெல்டிங் தொழிலாளி திருடியது தெரிந்தது. புகாரின் பேரில் வடலுார் போலீசார் அருள்செல்வனை கைது செய்து, ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
01-Nov-2025