மேலும் செய்திகள்
இரவில் 2 பேரிடம் வழிப்பறி 6 பேர் கும்பலுக்கு வலை
21-Oct-2025
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே, தொழிலாளியை தாக்கி நகை, பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோண்டூரை சேர்ந்தவர் வீராசாமி, 50; தொழிலா ளி. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில், சென்னை - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீ ழே உட்கார்ந்திருந்தார். அப்போது அந்த வழியே நடந்து சென்ற, 2 மர்ம நபர்கள் வீராசாமியை மிரட்டி அவர் வைத்திருந்த, 12 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தங்க செயினை பறித்து கொண்டு தப்பியோடினர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து வழிப்பறி செய்தவர்களை தேடி வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் சம்பவம் நடந்த, அதே இடத்தின் அருகே உள்ள மற்றொரு பாலத்தின் கீழ் இதே போன்று வழிப்பறி நடந்தது குறிப்பிடத்தக்கது.
21-Oct-2025