கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி
விருத்தாசலம் : விருத்தாசலம் மணிமுக்தாற்றில் உள்ள கழிவுநீர் கால்வாயில், சுமை துாக்கும் தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை மணிமுக்தாற்றின் பாலத்தின் கீழ் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் நேற்று கிடந்தது. தகவலின் பேரில், விருத்தாசலம் தீயணைப்பு துறை வீரர்கள் வந்து சடலத்தை மீட்டு, விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில், இறந்தவர், விருத்தாசலம் ஆலடி ரோடு, பாரதி நகரை சேர்ந்த குமார்,49; சுமை துாக்கும் தொழிலாளி, இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. சடலத்தை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.