உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் மோதி தொழிலாளி பலி

பஸ் மோதி தொழிலாளி பலி

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுாரைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் பாண்டியன்,30; கட்டட தொழிலாளி. இவர் நேற்று காலை 12:30 மணிக்கு வீரப்பெருமாநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டை பார்த்து விட்டு கடலுார்-சித்துார் சாலை வழியாக நடந்து சென்றார். சிறிது துாரம் சென்ற போது, கள்ளக்குறிச்சியில் இருந்து கடலுார் நோக்கி வந்த தனியார் பஸ் பாண்டியன் மீது மோதியது. இதில், பலத்த காயமைடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி