வாகனம் மோதி தொழிலாளி பலி
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி இறந்தார்.நெல்லிக்குப்பம் அடுத்த குயிலாபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், 45; கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது பேஷன்புரோ பைக்கில் சித்தரசூரில் இருந்து நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்லும் கரும்பு அபிவிருத்தி திட்ட சாலையில் வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.