உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

நடுவீரப்பட்டு: விவசாய கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வெள்ளக்கரை மலைத்தெருவை சேர்ந்தவர் பாவாடைகிருஷ்ணன்,63; விவசாய கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றவர், ஒதியடிக்குப்பம் ஜானகிராமன் நிலத்தில் பூச்சிமருந்து குடித்து ஆபத்தான நிலையில் கிடந்தார். தகவலறிந்த அவரது மனைவி மல்லிகா மற்றும் மகன்கள் சென்று, அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அன்று இரவு இறந்தார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, எதனால் பாவடை கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி