கேபிளில் சிக்கி தொழிலாளிகள் காயம்
கிள்ளை: சிதம்பரம் அடுத்த கீழ்அனுவம்பட்டு ஊராட்சியில், நுாறு நாள் வேலை திட்ட பணியாளிகள், 60 பேர், வாய்க்கால் துார்வாரும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அருகிலேயே விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு ஓட்டினர். அப்போது, மின் கம்பத்தில் கட்டியிருந்த பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் ஒயர், டிராக்டரின் கூரையில் சிக்கி, இழுத்தது. அதனால், வாய்க்காலில் துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கேபிளில் சிக்கி, அவர்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். விழுந்து துடித்த அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, டிரைவர் உத்திராபதி டிராக்டரை நிறுத்தி, கேபிளை அகற்றினார்.இந்த விபத்தில், 31 - 55 வயதுடைய 10 பேர் படுகாயமடைந்தனர்.