உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி மர்ம சாவு  

தொழிலாளி மர்ம சாவு  

நடுவீரப்பட்டு,செப்.5– விவசாய தொழிலாளி முந்திரி தோப்பில் மர்ம மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பத்திரக்கோட்டை அம்பேத்கார்  நகரை  சேர்ந்தவர் பாலு,55; தொழிலாளி. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள முரளி என்பவரின் முந்திரி தோப்பில் இறந்து கிடந்தார். அருகில் பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. இதுகுறித்து அவரது மனைவி மாலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை