உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் பவர் பிளாண்ட் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யக் கோரி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர். பின், பொதுமக்கள் குறைக்கேட்புக் கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில், 'நெய்வேலி அடுத்த ஊத்தாங்காலில் உள்ள டாக்குவா பவர் பிளாண்ட்டில், செட்டிநாடு லிக்னைட் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் 85க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில், பணி நீக்கம் செய்யப்பட்ட 14 பேரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டுமென, கூறப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ