உள்ளூர் செய்திகள்

உலக பூமி தினம்

விருத்தாசலம்: புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில், வேளாண் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.திருச்சி தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் விருத்தாசலம் பகுதியில் தங்கி பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உலக பூமி தினத்தையொட்டி, விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில், வேளாண் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மரக்கன்றுகள் நடுவதன் பயன், புமியை பாதுகாப்பது குறித்து, மாணவிகள் அபிநயா, அல்பியா, அனிதா, ஆர்த்தி, அருணாதேவி, அஸ்வினி, தனுஷ்யா ஆகியோர் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை