உலக அலையாத்தி தினம்
கிள்ளை: சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உலக அலையாத்தி தின விழாவை யொட்டி ஆத்துார் சின்னசாமி நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் தலைமை வனப்பாதுகாவலர் பெரியசாமி தலைமை தாங்கி பேசுகையில், 'பிச்சாவரத்தின் அலையாத்தி வனங்களின் தனித்துவம் உப்பு சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். குறிப்பாக, துாண் வேர்கள், சுவாச வேர்கள், உப்பு வெளியேற்றும் அமைப்பு போன்ற தனித்துவமான தாவரச் சிறப்புகளை கொண்டது அலையாத்தி காடுகள்' என்றார். சிறப்பு விருந்தினர் எஸ்.பி., ஜெயகுமார் அலையாத்தி மரக்கன்றுகள் நட்டு வைத்து, அலையாத்தி காடுகளின் முக்கியத்துவம் குறித்து பே சினார். ஆத்துார் சின்னசாமி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, வினாடி - வினா போட்டி நடத்தி பரிசு வழங்கப்ப ட்டது. விழாவில், மாவட்ட வன அலுவலர் குருசாமி, பிச்சாவரம் வனச்சரக அலுவலர் இக்பால் உட்பட பலர் பங்கேற்றனர்.