மேலும் செய்திகள்
செஸ் போட்டியில் மாணவர்கள் பங்கேற்பு
04-Jul-2025
கடலுார் : வாழப்பட்டு வள்ளிவிலாஸ் ஆலயா பள்ளியில், உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் விழா நடந்தது. இதனை முன்னிட்டு, இயற்கை வளங்களான நீர், மரம் உள்ளிட்டவற்றை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, குள்ளஞ்சாவடியில் உள்ள ஈஷா நர்சரிக்கு பள்ளி மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு மண் வகைகள், விதை நடும் முறை, செடிகள் பராமரிப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
04-Jul-2025