உலக புகைப்பட தினம்
சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உலக புகைப்பட தினத்தையொட்டி உணவு வழங்கப்பட்டது. புகைப்பட சங்க தலைவர் ஹென்றி தலைமை தாங்கினார். நிர்வாகி சத்யா, நகர செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை மகப்பேறு டாக்டர் பிரணவ், உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கினார். நிர்வாகிகள், ரவி, தினேஷ், ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.