ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் யாக சாலை பூஜை
கடலுார் : வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு யாகசாலை பூஜை துவங்கியது.கடலுார் வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில், நாளை 31ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது.தொடர்ந்து நவக்கிரக கலச பூஜை, தன பூஜை, கோ பூஜை, பூர்ணாஜூதி நடந்தது. நேற்று காலை பாடலீஸ்வரர் கோவில் சிவகரகுளத்தில் இருந்து சிவகர தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து முதல்காலம், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.இன்று மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. நாளை 31ம் தேதி காலை 9.15மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு முருகன் திருக்கல்யாணம் மற்றும் வீதியுலா நடக்கிறது.