உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலி டீத்துாள் விற்பனையா தகவல் தெரிவிக்கலாம்

போலி டீத்துாள் விற்பனையா தகவல் தெரிவிக்கலாம்

கடலுார்: கடைகளில் காபித்துாள், டீத்துாள் போலியாக விற்பனை செய்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என, காவல்துறை அறிவுசார் சொத்துரிமை திருச்சி மற்றும் கடலுார் மாவட்ட அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது.இதுகுறித்து கடலுார் மாவட்ட கால்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில், பொது மக்கள் அன்றாடம் கடைகளில் வாங்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், உடைகள், காபித்துாள், டீ த்துாள், சோப்புத்துாள் மற்றும் இதர பொருட்கள் ஏதேனும் போலியாக இருப்பது தெரிந்தால் உடனே காவல் துறைக்கு, திருச்சி காவல் ஆய்வாளர் 9994111820, உதவி ஆய்வாளர் கடலுார் 9976897566 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ