உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

கடலுார்: கடலுாரில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். . கடலுார், குமாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் சுவேதா,23; பண்ருட்டியில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 11ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற சுவேதா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து சுவேதாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை