மேலும் செய்திகள்
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு 'போக்சோ'
03-Oct-2025
பரங்கிப்பேட்டை: போலீஸ்காரரை தாக்கிய, வாலிபரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம், குபேர் இருவரும் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடை முன்பு நின்றுக்கொண்டு, இங்கு யாரும் மதுபாட்டில்கள் வாங்கக்கூடாது என ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளனர். தகவலறிந்த, போலீஸ்காரார் சதீஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்டார். அப்போது, சதீஷ்குமாரை, இருவரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து, சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மாணிக்கத்தை, 36; கைது செய்தனர். குபேரை, தேடிவருகின்றனர்.
03-Oct-2025