உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 2 லட்சம் மோசடி விருதை வாலிபர் கைது

ரூ. 2 லட்சம் மோசடி விருதை வாலிபர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக, பணம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் புகழேந்திராஜா,30; இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, குள்ளஞ்சாவடி, கரைமேடு அடுத்த கோதண்டராமபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசுதன், 37; என்பவரிடம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2 லட்சம் ரூபாய் பெற்றார்.ஆனால், இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தார். இதுகுறித்து சிவசுதன் கடந்த 19ம் தேதி விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து புகழேந்திராஜாவை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை