தொழிலாளிக்கு வெட்டு வாலிபர் கைது
திட்டக்குடி : திட்டக்குடி அருகே குடும்ப பிரச்னையில் தொழிலாளியை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திட்டக்குடி அடுத்த பெருமுளை, புதுகாலனியை சேர்ந்தவர் சக்கரபாணி, 47; கூலித் தொழிலாளி. இவரது மகளை அதே பகுதியை அஜய் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமுதல் இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணியளவில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த அஜயின் தம்பி கவுதம், 26, என்பவர், கத்தியால் சக்கரபாணியின் கழுத்தில் வெட்டினார். படுகாயமடைந்த அவர், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து, கவுதமை கைது செய்தனர்.