வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இனிமே கைக்கட்டு கால்கட்டு போடாத திருடர்களே இருக்க முடியாது போல. இருக்கே மாறு கை மாறு கால் வாங்கிடறாங்களே ஒருபக்கம் இதுதான் சரின்னு படுது.
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில், கடந்த மாதம் 24ம் தேதி, இடையாம்பாளசொரி கிராமத்தை சேர்ந்த தனுஷ்குமார், 21; என்பவர், பல்சர் பைக்கை நிறுத்தியிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த பைக் காணாமல் போனது. இதுகுறித்து அவர், அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், நேற்று மாலை அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீசார், ரயில்வே மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர், சிதம்பரம் எம்.கே.தோட்டம் பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ஸ்ரீராம், 20; என்பதும், சிதம்பரம் மருத்துவக்கல்லுாரியில் தனுஷ்குமார் பைக்கை திருடியதும் தெரியவந்தது. அவர் மீது அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.போலீசார் கைது செய்தபோது தப்பியோடியபோது, ஸ்ரீராம் பாலத்தில் இருந்து கீழே குதித்ததால் அவரது கை முறிவு ஏற்பட்டது. அதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின்னர் அவரை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இனிமே கைக்கட்டு கால்கட்டு போடாத திருடர்களே இருக்க முடியாது போல. இருக்கே மாறு கை மாறு கால் வாங்கிடறாங்களே ஒருபக்கம் இதுதான் சரின்னு படுது.