விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பண்ருட்டி : பண்ருட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் வள்ளலார் காலனியை சேர்ந்தவர் சண்முகம் மகன் விக்னேஷ், 25; பால் வியாபாரி; திருமணமாகவில்லை. இவர் தனது தங்கை திருமணத்திற்காக வாங்கிய கடன் அடைக்க வேண்டிய மனஅழுத்ததில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார்.ஆபத்தான நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து பின் மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று இறந்தார்.பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.