உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடன் பிரச்னையால் வாலிபர் தற்கொலை

கடன் பிரச்னையால் வாலிபர் தற்கொலை

திட்டக்குடி:கடன் பிரச்னையால் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன்,34. இவருக்கு அன்பரசி,31 என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.கோபிகிருஷ்ணன் பங்குச்சந்தை தொழிலில் பணத்தை இழந்து, பலரிடம் கடன் வாங்கினார். இந்நிலையில், காணும் பொங்கல் விளையாட்டு போட்டியின் போது அதே கிராமத்தை சேர்ந்த சிலருடன் பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த கோபிகிருஷ்ணன், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ