இளைஞர் காங்., நிர்வாகிகள் கூட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 'ஸ்டாப் ஓட்டு திருட்டு' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வாகனங்களில் ஓட்டினார். விருத்தாசலம் காங்., மாளிகையில் இளைஞர் காங்., செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சஃபான் சாகுல் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்., மாநில தலைவர் சூரிய பிரகாஷ், துணைத் தலைவர் தினேஷ் பேசினர். தொகுதி தலைவர்கள் அன்புமணி, அரவிந்த், மாவட்ட பொதுச் செயலாளர் கோகுலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ராஜன், நகர தலைவர்கள் ரஞ்சித்குமார், வேல்முருகன், வட்டார தலைவர்கள் ராவணன், சாந்தகு மார், ராமச்சந்திரன், கலியபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து 'ஸ்டாப் ஓட்டு திருட்டு' வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை அவ்வழியே சென்ற வாகனங்களில் எம்.எல்.ஏ., ஓட்டினார். நிர்வாகிகள் வாக்குவாதம் கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக, ஒருதரப்பு நிர்வாகிகள் தங்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க முறையாக அழைப்பு இல்லை, மேடைக்கு அழைக்கவில்லை எனக்கூறி மற்றொரு தரப்பிடம் முறையிட்டதால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இருதரப்பையும் நிர்வாகிகள் சமாதானம் செய்தனர்.