உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம் 

இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம் 

கடலுார் : கடலுார் லாரன்ஸ்ரோடு சிக்னல் அருகில் மத்திய மாவட்ட இளைஞர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் காங்., மாவட்டத் தலைவர் அருள் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ரஞ்சித் வரவேற்றார். தொகுதி தலைவர் தர்மதுரை, மாவட்ட பொதுச் செயலாளர் விக்னேஷ், கார்த்திகேயன், சிறுபான்மை பிரிவு ரஹீம், சேவா தள மாவட்டத் தலைவர் ஆறுமுகம், ராமராஜ், கல்பனா, கோபிநாத் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் கண்டன உரையாற்றினார். பர்வீன் பானு, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் விட்டல், சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு காங்., தலைவர் செல்வபெருந்தகையை விமர்சித்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி