உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி

ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த நங்குடியில் சாலையில் ஆம்னிபஸ் மோதியதில் சாலையை கடக்க முயன்றவர் இறந்தார். சேத்தியாத்தோப்பு அடுத்த நங்குடி வள்ளலார் தெருவைச் சேர்ந்த சம்பத் மகன் சந்திரபிரகாஷ்,25; இவர் நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் நங்குடி உயர்மட்ட பாலம் இறக்கத்தில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சாலை சென்டர் மீடியனில் ஏறிகுதித்து சாலையை கடக்க முயன்றார். அப்போது தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் சந்திரபிரகாஷ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த சோழத்தரம் போலீசார் உடலை கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை