மேலும் செய்திகள்
இளைஞர்களுக்கு வீடியோ வடிவமைப்பு பயிற்சி
21-Aug-2025
திட்டக்குடி : திட்டக்குடியில் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என தொகுதிக்குட்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என, விளையாட்டுத் துறை அமைச்சர், துணை முதல்வர் உதயநிதி அறிவித்துள்ளார். இதற்காக, அந்தந்த தொகுதிகளில் குறைந்த பட்சம் 5 ஏக்கர் பரப்பளவில் ஸ்டேடியம் அமைக்க 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அதில், 400 மீட்டர் ஓடுதளம், அலுவலகம், கேலரி, கைப்பந்து, வலைப்பந்து, கபடி, கோ கோ, கால்பந்து ஆடுகளங்கள், கழிவறை வசதிகளும் அடங்கும். இதன்மூலம் திறமையான இளம் வீரர்களை உருவாக்கி விளையாட்டுத்துறையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திட்டக்குடி தொகுதி விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று விருதுகள் பெற்று வருகின்றனர். பின்தங்கிய இப்பகுதியில் முறையாக பயிற்சி பெற மைதானம் மற்றும் பயிற்சியாளர்கள் இல்லை. இதனால் தொகுதிக்குட்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் புலம்பி வருகின்றனர். எனவே, இளைஞர்கள் நலன்கருதி, திட்டக்குடியில் மினி ஸ்டேடியம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21-Aug-2025