உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் மாணவி காயம்

சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் மாணவி காயம்

சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் மாணவி காயம்பாப்பாரப்பட்டி, : பாப்பாரப்பட்டி அருகே, சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில், மாடி வீடு இடிந்தது. வீட்டிலிருந்த கல்லுாரி மாணவி படுகாயமடைந்தார்.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் மனைவி மலர். இருவரும் பெங்களூருவில் தங்கி, கட்டட வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன். இவர்களது, 2வது மகள் கலையரசி, 20, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், 3ம் ஆண்டு படித்துக் கொண்டு, வீட்டில் தனியாக வசிக்கிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்று வந்து, இரவு சமையல் செய்து சாப்பிட்டு விட்டு துாங்கியுள்ளார். இரவில், சமையல் காஸ் சிலிண்டரிலிருந்து காஸ் கசிவு ஏற்பட்டு, வீட்டின் உள்ளே பரவி, நள்ளிரவில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், மாணவி கலையரசி தீ காயங்களுடன் துாக்கி வீசப்பட்டார். பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து, அவரை மீட்டு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல்சிகிச்சைக்காக சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் மாணவி கலையரசி சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து, தடயவியல் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை