/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கவி.சி.,க்கள் ஆர்ப்பாட்டம்
வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கவி.சி.,க்கள் ஆர்ப்பாட்டம்
வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கவி.சி.,க்கள் ஆர்ப்பாட்டம்அரூர், :தர்மபுரி கிழக்கு மாவட்ட வி.சி., சார்பில், அரூர் தாலுகா அலுவலகம் முன், வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க கோரி, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும். குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.தலைமை நிலைய செயலாளர் தமிழ்செல்வன், முன்னாள் மண்டல செயலாளர் நந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜானகிராமன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாரதிராஜா, நிர்வாகிகள் கேசவன், தீரன் தீர்த்தகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.