உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவியை திருமணம் செய்தடிரைவர் போக்சோவில் கைது

மாணவியை திருமணம் செய்தடிரைவர் போக்சோவில் கைது

மாணவியை திருமணம் செய்தடிரைவர் போக்சோவில் கைதுஅதியமான்கோட்டை:சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த, தொளசம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 25. இவர் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள கல்குவாரியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், தர்மபுரி அருகே அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்த, 17 வயது மாணவியுடன் கடந்த, 11 அன்று மாயமானார். இது குறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் மாணவி மற்றும் டிரைவரை தேடி வந்தனர். இதில், கடந்த 13 அன்று மாணவியை திருமணம் செய்து கொண்டு, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. விஜயவாடா சென்ற அதியமான்கோட்டை போலீசார், ஈஸ்வரனை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை